‘ராமாயணா’ படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி? உண்மை என்ன?

ஹிந்தி மொழியில் நிதிஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்த பிரம்மாண்டமான படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்க, சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி தோன்றுகிறார். ராவணன் வேடத்தில் யஷ் நடிக்க, அவருடன் சன்னி டியோல், காஜல் அகர்வால், ரகுல் பீரித் சிங் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹென்ஸ் சிம்மரும், இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் இவ்வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பே இந்த படத்திலிருந்து ஒரு க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் ராமாயணக் கதையில் விபீஷணன் வழியில் அமைந்த ராவணனின் சகோதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நியாயம், தர்மம் ஆகியவற்றை முன்னிறுத்தி வாழும் இந்த கதாபாத்திரம், ராமாயணத்தில் ராமனுக்கு ஆதரவாக நிற்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading