புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ராம் சரணின் ‘பெத்தி’ படக்குழு!

தெலுங்கு திரையுலகில் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வரும் திரைப்படம் ‘பெத்தி’. இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, முக்கிய வேடங்களில் நடிகர்கள் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தால், ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டை ஒரு மாதம் தள்ளி வைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘பெத்தி’ திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவாகும் இந்த படம், தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading