மமிதா பைஜூ எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு ஸ்டார் மெட்டீரியல் என முன்பே கணித்தேன் – நடிகை ரஜிஷா விஜயன்

மலையாள திரையுலகில் ‘பிரேமலு’ என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘டியூட்’ திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் மமிதா பைஜூ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் 41-வது திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து முக்கியமான முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருவது, அவரது வளர்ச்சியை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இந்த சூழலில், ‘கர்ணன்’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரஜிஷா விஜயன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மமிதா பைஜூ குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “நானும் மமிதா பைஜூவும் 2020-ஆம் ஆண்டு வெளியான ‘கோ கோ’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்தோம். அப்போதே அவரது துடிப்பையும் சுறுசுறுப்பையும் பார்த்து, இவர் நிச்சயம் ஒரு ஸ்டார் மெட்டீரியல்; எதிர்காலத்தில் பெரிய நடிகையாக உயர்வார் என்று அங்கிருந்தவர்களிடம் கூறினேன். ஆனால் அந்த நேரத்தில் யாரும் அதை நம்பவில்லை. இன்று நான் சொன்னது போலவே அனைத்தும் நடந்து வருகிறது. இன்னும் வருங்காலத்தில் அவர் திரையுலகில் மிகப்பெரிய உயரங்களை எட்டுவார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading