தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் அடுத்த படமான ‘ஏஏ 22’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக சமீப காலமாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த சூழலில், மிருணாள் தாகூர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தொகுப்பாளர் ‘ஏஏ 22’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மிருணாள், சிரித்தபடியே, “ஓ… அப்படியா? அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அது உண்மையில் நடந்தால், இந்த பேட்டியை மீண்டும் பார்த்து கொண்டாடுவேன்,” என தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாக பகிர்ந்த மிருணாள் தாகூரின் இந்த கருத்து ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. ‘ஏஏ 22’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
