‘வாரணாசி’ படத்தில் சுமார் 25 நிமிடங்கள் வரை முழுமையான புராணக் காட்சிகள் இடம்பெறும் – இயக்குனர் ராஜமௌலி

நடிகர்கள் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, இயக்குநர் ராஜமவுலி இயக்கி வரும் திரைப்படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘வாரணாசி’ படம் குறித்து சமீபத்தில் ராஜமவுலி அளித்த பேட்டி ஒன்றில், இந்த திரைப்படத்தில் புராணக் கூறுகள் அதிக அளவில் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, புராண காலத்தின் பயணக் கருத்துக்களும், தெய்வீக அம்சங்களும் கலந்த ஒரு கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும், சுமார் 25 நிமிடங்கள் வரை முழுமையான புராணக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறும் என்றும், படத்தின் முதல் பார்வை ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்ததோ, அதேபோன்று முழு திரைப்படமும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் இருக்கும் என்றும் ராஜமவுலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற வேடத்திலும், பிருத்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading