தேசிய விருதுக்குப் பிறகும் ஹீரோ வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அப்புக்குட்டி – மனக்குமுறல்!

தமிழில் ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தேசிய விருது பெற்றவர் அப்புக்குட்டி. இதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வந்த அவர், அந்தப் படத்துக்குப் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். இருப்பினும், சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை; பல படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளன.

இதுகுறித்து பேசிய அப்புக்குட்டி, ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்குப் பிறகு நகைச்சுவை நடிகராகத் தொடர்வதா அல்லது கதாநாயகனாக நடிப்பதா என்ற குழப்பம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். உறுதியான முடிவை எடுக்க முடியாததால், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து நடித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்றதால், விருதுகளை இலக்காகக் கொண்ட கதைகளே தன்னைத் தேடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ‘வாழ்க விவசாயி’, ‘ஜீவகாருண்யம்’, ‘ஆ.கன்னியப்பன்’, ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’ உள்ளிட்ட படங்கள் அதற்கு உதாரணம் என தெரிவித்துள்ளார். விருதுகள் மகிழ்ச்சி அளித்தாலும், நகைச்சுவை கலந்த கதைகளில் கதாநாயகனாக நடித்து பெயர் பெறவே விரும்புவதாகவும், தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் இயக்குநர் கிடைப்பார் எனக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading