அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரம்மாண்ட படத்தில் கதாநாயகிகளாக தீபிகா படுகோனே மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல கட்டங்களாக திட்டமிடப்பட்டு, ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் செராப் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம் செராப் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
