100 நாட்களை நிறைவு செய்த பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘டியூட்’. தீபாவளியை முன்னிட்டு 2025 அக்டோபர் 17-ம் தேதி வெளியான இந்த படம், இன்றைய இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் 100-வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளது. “டியூட் எப்போதும் நேசிக்கப்படுகிறது, டியூட் எப்போதும் கொண்டாடப்படுகிறது, டியூடிஸத்தின் 100-வது பிளாக்பஸ்டர் நாள்” என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்தன. தற்போது ‘டியூட்’ திரைப்படமும் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதால், தொடர்ந்து மூன்று படங்கள் 100 கோடி வசூல் செய்த ஹாட்ரிக் நாயகன் என்ற பெருமையை பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading