கவின் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த நடிகை சிம்ரன்!

கவின் நடிப்பில் கடந்த ஆண்டு ‘கிஸ்’ மற்றும் ‘மாஸ்க்’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றதால், அதன் பின்னர் கதைத் தேர்வில் கவனமாக செயல்பட்டு வருகிறார் கவின். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் கவினின் 9வது திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் பேண்டஸி ஜானரில் உருவாகி வருகிறது.

தற்போது, இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிம்ரன் தனது கதாபாத்திரத் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும், கதைக்கு தேவையான வேடங்களையும் தேர்வு செய்து அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading