‘தும்பட்’ என்ற கல்ட் கிளாசிக் திரைப்படத்தை வழங்கி ரசிகர்களிடையே தனித்த அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரஹி அனில், தற்போது தனது புதிய படைப்பை ரசிகர்களுக்கு கொண்டு வந்துள்ளார். அவர் தற்போது இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘மாயசபா – தி ஹால் ஆப் இல்லுஷன்’ ஆகும்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தும்பட்’ படத்தில் காணப்பட்டதைப் போலவே, இந்த திரைப்படத்திலும் ஒரு வித்தியாசமான, கற்பனை நிறைந்த உலகம் வெளிப்படும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.
குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாவேத் ஜாபேரி, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் புதிய அவதாரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்த உள்ளார். அவருடன் வீணா ஜம்கர், தீபக் டாம்லே, முகமது சமத் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
