அனுபமா நடிப்பில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த திரைப்படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இணைந்து இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை கே.ஏ. சக்திவேல் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘லாக் டவுன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக வெளியீட்டுக்காக காத்திருந்த இந்த படம், முதலில் டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என மாற்றியமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பல தடைகளை கடந்து, இறுதியாக திரையரங்குகளை நோக்கி வருகிறது ‘லாக் டவுன்’ திரைப்படம்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading