‘கர’ படத்தில் தனுஷ் கொஞ்சம் வில்லத்தனமாக நடித்துள்ளார் – இயக்குனர் விக்னேஷ் சிவன்!

நடிகர் தனுஷ், தற்போது ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார். இந்த கூட்டணி காரணமாகவே படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இந்த திரைப்படத்திலிருந்து வெளியான க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் ராஜா அளித்த ஒரு பேட்டியில், ‘கர’ திரைப்படம் குறித்த தகவல்களை முதல் முறையாக விரிவாக பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘போர் தொழில்’ படம் வெளியான பிறகு நடிகர் தனுஷ் தன்னை நேரடியாக தொடர்பு கொண்டு, இணைந்து ஒரு படம் செய்யலாம் என விருப்பம் தெரிவித்ததாக கூறினார்.

அதன் பின்னர், இரண்டு வெவ்வேறு நாளிதழ்களில் வெளியாகிய செய்திகளை அடிப்படையாக கொண்டு, ‘கர’ படத்தின் கதையை உருவாக்கியதாக அவர் விளக்கினார். இந்த திரைப்படம் 1990-களின் காலகட்டத்தில், ராமநாதபுரம் பகுதியை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதையில், நடிகர் தனுஷ் இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட வகையில், கொஞ்சம் வில்லத்தனம் கலந்த ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading