சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல யூடூபர் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் புதிய திரைப்படம்!

மாவீரன்’, ‘3பிஎச்கே’, ‘சியான் 63’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் சாந்தி டாக்கீஸ், தனது நான்காவது திரைப்படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை சான்வே மேகனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய படங்களுள் ஒன்றாக, பாரத் – சான்வே மேகனா இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த படம், இதுவரை பெயரிடப்படாத நிலையில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒருபுறம் சிறிய ஏமாற்றத்தையும், மறுபுறம் அதிகமான ஆவலையும் உருவாக்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் ‘தயாரிப்பு எண் 4’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம், படத்தின் பூஜை நிகழ்வு நடைபெற்றதும், படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் பால சரவணனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading