தமிழ் சினிமாவின் திறமையான முன்னணி நடிகர் மணிகண்டன், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் நடித்துப் பணியை நிறைவு செய்துள்ளார். இந்த திரைப்படம் ஒரு சமூக அரசியல் கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தை மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், மணிகண்டனின் சமூக அக்கறை கொண்ட நடிப்பை மீண்டும் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
மேலும், தற்போது நடிகர் மணிகண்டன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள புதிய திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, மணிகண்டனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
