‘இம்மார்ட்டல்’ படம் இளைஞர்கள் மட்டுமல்ல குடும்பங்களும் பார்க்கும்படியான படமாக தான் இருக்கும் – இயக்குனர் மாரியம்மன் சின்னா!

இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘இம்மார்ட்டல்’. இந்த படத்தில் டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து இயக்குநர் பேசுகையில், திரைப்படத்தின் முதல் பாதி முழுவதும் ரொமான்ஸை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் பாதியில் திரில்லர் மற்றும் பேண்டஸி அம்சங்கள் அதிகமாக இடம்பெறும் வகையில் அழுத்தமான கதை சொல்லலுடன் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனுடன், சிறிதளவு உளவியல் கூறுகளையும் இணைத்து கதையை எடுத்துச் சென்றுள்ளோம் என்றும் அவர் விளக்கினார். இது வெறும் திரில்லர் திரைப்படமாக மட்டுமல்லாமல், உணர்ச்சிகளை முன்னிலைப்படுத்தி பேசும் படமாகவும் இருக்கும் என்றார்.

காதல், பயம், திரில், திகில், இசை என பல்வேறு அடுக்குகளைக் கொண்ட இந்த படம், இளைஞர்களுக்கான படமாக மட்டுமல்லாமல், குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading