ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மை லார்ட்’. இந்த படத்தில் சைத்ரா ஜே. ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனித்து வருகிறார்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். அம்பேத்குமார் வழங்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான டிரெய்லரில், கதையின் நாயகனாக வரும் சசிகுமார் பேசும் வசனங்கள், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் குறித்த கருத்துகள் மற்றும் சிறுநீரகத் திருட்டு தொடர்பான காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. எளிய மனிதர்களின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
