தனுஷின் ‘கர’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான புது அப்டேட்!

‘போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். அவர்களுடன் ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் தொடர்பான அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள ‘கர’ திரைப்படத்தை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading