தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வரும் நயன்தாரா மற்றும் திரிஷா இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகர் அஜித்தின் ரேஸ் கிளப்பிற்கு சென்றிருந்தார். துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியை நேரில் காணச் சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அங்கு அஜித்தை சந்தித்து உரையாடிய தருணங்கள் இணையத்தில் வைரலாக பரவின.
இதனைத் தொடர்ந்து, நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் படகு ஒன்றில் அருகருகே அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலை பின்னணியாக கொண்டு நயன்தாரா–திரிஷா வெளியிட்டுள்ள இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் இருவரது ரசிகர்களிடையே வேகமாக கவனம் ஈர்த்து வருகிறது.
சினிமா துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக செயல்பட்டு வரும் நயன்தாரா மற்றும் திரிஷா இடையே பனிப்போர் நிலவி வருவதாக சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது கிசுகிசுக்கள் எழுந்தாலும், தாங்கள் இருவரும் நல்ல நட்புடனே இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, “வானுக்கும் எல்லை உண்டு… நட்புக்கு இல்லையே” என்ற வாசகத்துடன் அவர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த பதிவு தற்போது வரை 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.
