மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மூவரும் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படம் ‘காந்தி டாக்ஸ்’ ஆகும். இந்த படம் வசனங்கள் எதுவுமின்றி முழுக்க மெளனப் படமாக உருவாகியுள்ளதாகவும், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை இயக்குநர் கிஷோர் பி. பெல்லேக்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ம் தேதி உலகளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
