2026ம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக ‘நாகபந்தம்’ திரைப்படம் பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நடிகை நபா நடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நபா நடேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் அவர் ‘பார்வதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இந்த படம், திரில்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
