நிவின் பாலி தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கூடுதல் கவனம் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்திலும் நிவின் பாலி நடித்துள்ளார். மேலும், நடிகை நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடெண்ட்ஸ்’ படத்திலும் நடித்து தனது பங்கினை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘சர்வம் மாயா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி பெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இயக்குநர் அருண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Baby Girl’ திரைப்படத்தில் நிவின் பாலி நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் லிஜோ மோல், சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘Baby Girl’ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
