பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கிய புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் ஹிந்தி நடிகை தபு மற்றும் மலையாள நடிகை சம்யுக்தா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் பூரி ஜெகநாத் மற்றும் நடிகை சார்மி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கதாபாத்திரம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளதாகவும், அந்த கதாபாத்திரம் நடிகை தபுவை காதலிப்பது போன்ற கதையமைப்பில் படம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வித்தியாசமான கதாபாத்திரம் விஜய் சேதுபதியின் நடிப்பில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
