‘அங்கம்மாள்’ திரைப்படத்தில் கீதா கைலாசம் முதிய தோற்றத்தில் கதையின் மைய நாயகியாக நடித்திருந்தார். அதேபோன்று தற்போது நடிகை ராதிகா, ‘தாய்கிழவி’ என்ற திரைப்படத்தில் ‘பவுனத்தாய்’ எனும் முதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த வரிசையில் தற்போது நடிகை வடிவுக்கரசியும் இணைந்துள்ளார். ‘க்ராணி’ என்ற த்ரில்லர் திரைப்படத்தில், 80 வயதை கடந்த முதிய பெண்ணாக அவர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விஜயமரி யுனிவர்சல் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் வடிவுக்கரசியுடன் திலீபன், அபர்ணா, கஜராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜயகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்லையா பாண்டியன் இசையமைத்துள்ளார். இது ஒரு பேய் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதுடன், இதில் வடிவுக்கரசி சூனியக்காரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
