நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருவதை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை’, ‘ரம்மி’, ‘கனா’, ‘வடசென்னை’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து ‘டிரைவர் ஜமுனா’, ‘ஃபர்ஹானா’, ‘புலிமடா’, ‘தீராக் காதல்’ போன்ற படங்கள் அவருக்கென ஒரு தனித்த ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கில் நடித்துள்ள ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
