பாலிவுட் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இணைந்த கூட்டணியில் இதுவரை ‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’, ‘தேரே இஸ்க் மே’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, இந்த கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான ‘தேரே இஸ்க் மே’ திரைப்படம் பாலிவுட்டில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பதிவு செய்து, பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல். ராய் நான்காவது முறையாக புதிய திரைப்படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய படம் பீரியட், ஆக்சன் மற்றும் டிராமா கதைக்களங்களை மையமாகக் கொண்டு உருவாகும் என பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இவர்களின் முந்தைய மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் தான் இந்த நான்காவது படத்திற்கும் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த கூட்டணியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
