ஸ்டைலிஷ் லுக்கில் தனுஷ்… விரைவில் தொடங்குகிறதா ‘D55’ படப்பிடிப்பு?

‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54-வது திரைப்படத்தில் மூன்று மாதங்களுக்குள் நடித்து முடித்த நடிகர் தனுஷ், அடுத்ததாக ‘ரங்கூன்’, ‘அமரன்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55-வது படத்தில் நடிக்கத் தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய படத்திற்காக தனுஷ் சிறிதளவு உடல் எடையை அதிகரித்து வருவதுடன், தனது கெட்டப்பையும் முற்றிலும் ஸ்டைலிஷாக மாற்றி வருகிறார் என கூறப்படுகிறது. மேலும், தனுஷின் 55-வது பட அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில், இது இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்காக தனுஷை மீண்டும் சிக்ஸ் பேக் கெட்டப்பில் காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading