இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ‘பராசக்தி’ திரைப்படம் அவரது 100வது படமாக அமைந்துள்ளது. இந்த படம் தொடர்பாக அவர் பேசுகையில், இப்படத்தில் ஒரு முக்கிய ரகசியம் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அதை தற்போது சஸ்பென்ஸாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த ரகசியம் என்ன என்பதே தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

தனது நூறாவது படம் என்பதால், ஏ.ஆர். ரஹ்மானை பாடவைத்திருக்கிறாரா, அல்லது வேறு எந்த சிறப்பு கலைஞரை இணைத்திருக்கிறாரா, அல்லது படத்தில் ஜி.வி. பிரகாஷ் அவரே சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரா என பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை வரும் ஜனவரி 10ஆம் தேதி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘ஹாப்பி ராஜ்’ உள்ளிட்ட நான்கு படங்களில் கதாநாயகனாகவும் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மேலும், இந்த ஆண்டில் மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அவர் அறிமுகமாக உள்ளார். ஜி.வி. பிரகாஷ் முதன்முதலாக இசையமைத்த ‘வெயில்’ திரைப்படம் பெரிய ஹிட் ஆனது போலவே, ‘பராசக்தி’ படமும் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்ற ஆவலுடன் அவர் எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
