உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பேலா தார் காலமானார்!

உலக புகழ்பெற்ற ஹங்கேரிய இயக்குநர் பேலா தார் (bela tarr -70) உடல் நலக்குறைவால் (ஜன.6) காலமானார். இவர் இயக்கிய சடான்டாங்கோ (Sátántangó) – 7.5 மணி நேர திரைப்படம்!, வெர்க்மெய்ஸ்டர் ஹார்மோனிஸ் (Werckmeister Harmonies), (The Turin Horse) உள்ளிட்டவை உலக சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த திரைப்படங்களாகவே கருதப்படுகின்றன.ஹங்கேரிய வாழ்க்கைப் பின்னணியில் அரசியல், தனிமனித அக வீழ்ச்சிகள் ஆகியவற்றை அழகியலுடன் கூடிய திரைமொழியில் முன்வைத்தவர் என்றே விமர்சகர்கள் இவரை மதிப்பிடுகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading