ராஷ்மிகா ஏராளமான படங்கள் தன் கைவசம் வைத்து இருக்கிறார். டாப் ஹீரோயினாக வலம் வரும் அவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.சினிமா மட்டுமின்றி அவரது அப்பா மூலமாக சில தொழில்களிலும் ராஷ்மிகா முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. வீடு, பங்களா, எஸ்டேட் என பலவற்றை அவர் வாங்கி குவித்து இருக்கிறார். 2025-26 ஆண்டுக்கான வருமான வரியாக இதுவரை 4.69 கோடி ரூபாயை ராஷ்மிகா செலுத்தி இருக்கிறாராம். குடகு பகுதியில் அதிகம் வரி செலுத்தும் நபராக ராஷ்மிகா இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

