பிக்பாஸில் பங்கேற்ற கம்ருதீன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் முன்னதாக நடித்துவந்த ‘மகாநதி’ சீரியலில் இருந்தும் நீக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் சீரியல் குழு, “அவர் பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு நாள் இருப்பார் என தெரியாது. அதனால் கம்ருதீனுக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என முன்பே விஜய் டிவியுடன் பேசினோம். தற்போது தான் அவர் நீக்கப்பட்டது போல பேசுகிறார்கள் என கூறுகிறார்கள். அந்த ரோல் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டது போல காட்டப்பட்டு இருக்கிறது. மீண்டும் அந்த ரோல் வருமா என கதை தான் முடிவு செய்யும் எனவும் கூறி இருக்கின்றனர்.

