கடந்த மே 2023ம் ஆண்டு ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீரியல் தான் அண்ணா.தங்கைகளை பாதுகாக்கும் பொறுப்பான அண்ணனாக அவர்களுக்கான விஷயங்கள் செய்வது என வாழும் ஒரு அண்ணனின் கதையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த சீரியல் நல்ல ஹிட் தான். இப்போது என்ன தகவல் என்றால் 856 எபிசோடுகளை எட்டியுள்ள அண்ணா சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

