ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது.இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரன்வீர் சிங் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.இந்தப் படம் பிரிவினையைத் தூண்டுவதாகவும் தேசப்பற்று வளர்ப்பதாகவும் சமூக வலைதளத்தில் இரு பிரிவாக ஆதரவும் எதிர்ப்பும் பெருகின.இந்நிலையில், இந்தப் படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 33 நாள்களில் ரூ.831 கோடி வசூலித்துள்ளது. இதுதான் இந்தியாவில் அதிகம் வசூலித்த முதல் ஹிந்தி படமாக வரலாறு படைத்துள்ளது.

