ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தமிழில் முன்னணி நடிகையாக உயர்வார் என பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது அவர் தெலுங்கில் ‘கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்ததை முடித்துள்ளார்.

சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் திவ்ய பாரதி தெலுங்கு திரையுலகில் தனது அறிமுகத்தை பதிவு செய்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய திவ்ய பாரதி, தெலுங்கு திரையுலகில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் பவன் கல்யாண் என்று கூறினார். அவர் நடித்த ‘குஷி’ திரைப்படம் தன்னைக் கவர்ந்ததாகவும், அந்தப் படத்தை பலமுறை பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், நடிகர் அல்லு அர்ஜுனையும் தனக்கு பிடித்த நடிகராக குறிப்பிட்டார்.
