பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க இருந்றா நிறுத்தப்பட்ட ஒரு திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசினார்.

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க இருந்த அந்தப் படத்தின் கதை மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், அது ஒரு காதல் கதையாக அமைந்திருந்ததால் உடனடியாக அந்த வாய்ப்புக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும், விஜய் தேவரகொண்டா ஏற்கனவே தனக்கு நெருங்கிய நண்பராக இருந்ததாலும், அந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருந்ததாலும், எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பின்னர் விஜய் தேவரகொண்டா அந்தப் படத்தை விட ‘லிகர்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக மாளவிகா மோகனன் கூறினார். அதன் பின்னர் ‘சலார்’ திரைப்படக் குழு தன்னை அணுகியதாகவும், ஆனால் தேதிகள் பொருந்தாத காரணத்தால் அந்த வாய்ப்பையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார்.
