‘கில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சிறு விபத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு காயம்.!

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக அவனது கனவு படமாக இருந்து வந்த ‘கில்லர்’ திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சென்னை பாலவாக்கம் பகுதியில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்தது. அந்தப் படப்பிடிப்பின் போது, ரோப் கயிறு உதவியுடன் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சியில் அவர் நடித்து வந்தார். அச்சமயம், எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதியதால் அவர் விபத்தில் சிக்கினார். இதில், கம்பி மீது விழுந்த காரணத்தால் அவரது இரு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிகிச்சைக்கு பிறகு குறைந்தது 15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு, இந்த விபத்து காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading