ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஜி.வி.பிரகாஷ் குமார், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் உருவாகும் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பிளாக்மெயில்’. இந்தப் படத்தை இயக்குநர் மு.மாறன் இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக நடிகை தேஜு அஸ்வினி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘ஹாப்பி ராஜ்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணியாற்றிய மரியா இளஞ்செழியன் இயக்கி வருகிறார். நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பியாண்டு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம், காதல் பின்னணியுடன் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை கெளரி பிரியா நடித்துள்ளார். தற்போது படம் வெளியீட்டுக்கான அடுத்தகட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading