நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் வருகிற மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இப்படத்திலிருந்து நடிகைகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கியாரா அத்வானி, நயன்தாரா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது நடிகை ருக்மிணி வசந்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
