நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் யூடியூப் தளத்தில் வெளியான மிகக் குறுகிய நேரத்திலேயே 3.8 கோடி (38 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம், மிக விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் திரைப்பட டிரைலர் என்ற புதிய சாதனையை ‘ஜனநாயகன்’ படத்தின் டிரைலர் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த டிரைலர் ஹிந்தி மொழியில் 1.1 கோடி பார்வைகளையும், தெலுங்கு மொழியில் 74 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது. இந்த வேகத்தை தொடர்ந்து வைத்தால், இன்னும் சில நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் சினிமா டிரைலர் என்ற மற்றொரு சாதனையையும் ‘ஜனநாயகன்’ படத்தின் டிரைலர் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை சாதனைகள் இருந்தாலும், இதுவரை ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. முதல் முறை தணிக்கை சான்றிதழுகாக விண்ணப்பித்து தணிக்கை குழு பரிந்துரையின்படி அனைத்து திருத்தங்களையும் மேற்கொண்ட படக்குழு மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பியது. இருப்பினும் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் வழங்காததால் இதன் காரணமாக, முழுமையான டிக்கெட் முன்பதிவுகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
