நடிகர் கமல் மாநிலங்களவை உறுப்பினரான பின் அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையே, தன் 234-வது திரைப்படத்தின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், கமல் தனது மூத்த அண்ணன் சாருஹாசன் மற்றும் அண்ணி புகைப்படத்தைப் பகிர்ந்து, 2 புன்னகை மன்னர்கள் + மன்னி என பதிவிட்டுள்ளார்.

