என் கனவின் நாள் வந்துவிட்டது… ரஜினி நடிக்கும் ‘தலைவர் 173’ பட வாய்ப்பு குறித்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி நெகிழ்ச்சி!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 173 படத்தை இயக்கவுள்ளார் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த ஒரு சிறுவனின் மிகப்பெரிய கனவு, தனது பிடித்த நட்சத்திரமான “சூப்பர் ஸ்டார்” அவர்களை நேரில் சந்தித்து, அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வதுதான். அந்த ஆசைதான் அவனை சினிமா மீது தீவிரமாக ஈர்த்தது  ஒருநாள் அந்தப் பெருங்கனவு நனவானது.

அதன் பிறகு, “என் சூப்பர் ஸ்டாரையே நான் இயக்க வேண்டும்” என்ற இன்னும் பெரிய கனவு பிறந்தது. அந்தக் கனவுக்கு மிக அருகில் சென்றும், அது ஒருமுறை தவறியது. ஆனாலும், “ஒருநாள் அது நிச்சயம் நடக்கும்” என்ற நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து வந்தேன் –  இன்று அந்த நாளே வந்துவிட்டது. #Thalaivar173 Day.

அப்போது தலைவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவில் நிற்கின்றன. கனவுகள் நிச்சயம் நனவாகும், அற்புதங்கள் நிச்சயம் நிகழும். என்றார். மேலும் சில நேரங்களில் வாழ்க்கை கனவுகளைவிடவும் பெரிதாக மாறுகிறது. அந்தப் பெருமையின் உச்சமாக பத்மஸ்ரீ விருது பெற்றவருமான உலகநாயகன் கமல்ஹாசன் sir மற்றும் மகேந்திரன் sir ஆகியோர் எங்கள் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

தலைவர் ரஜினிகாந்த் Sir, கமல்ஹாசன் Sir & மகேந்திரன் Sir -உங்களின் நம்பிக்கைக்கு என்றும் நன்றி. அந்த நம்பிக்கையை காப்பாற்ற என் முழு மனதையும் ஆன்மாவையும் இந்நிலைக்கு அர்ப்பணிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். மீண்டும் என் அன்புக்குரிய அனிருத்துடன்  பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி. Love you Sir  என தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading