தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் டிம்பிள் ஹயாட்டி, தமிழில் ‘தேவி-2’, ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அவர் கவனம் பெற்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைத் தாண்டி, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டிம்பிள் ஹயாட்டி தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கு கூடுதலாக, சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிம்பிள் ஹயாட்டியிடம், “ஏன் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம். அங்குள்ள ரசிகர்களின் அன்பும் ஆதரவும் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கிறது. தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் அதிகமாக உள்ளது. விரைவில் அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன். தென்னிந்திய அளவில் கலக்க வேண்டும் என்பதே என் கனவு” என்று தெரிவித்துள்ளார்.
