விஜய் சேதுபதி – அரவிந்த் சாமி நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகராக அவர் அறியப்படுகிறார். தமிழ் மொழியைத் தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் அவரது நடிப்பு பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி, இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து பணிகளை முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ‘பேசும் படம்’ போன்று, உரையாடல்கள் இல்லாத மவுன திரைப்படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டீசரை வெளியிட்டு, இந்த படம் வருகிற 30-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading