தளபதி விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன்- இயக்குனர் ஹெச் வினோத்!

ஜனநாயகன் படத்தின் கதை ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா, அல்லது அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை மட்டும் லேசாக எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதா என்று படம் பார்க்க வருகிறவர்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். காரணம், இது ஒரு தளபதி விஜய் படம். நீங்கள் ஒரு ஷோ மட்டும் பொறுமையாக காத்திருந்து பாருங்கள். அந்த ஒரே ஷோவிலேயே உங்களுக்கு பதில் கிடைத்துவிடும் என்றார்.

மேலும் தொடர்ந்து டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகும் போது, இந்த விஷயம் குறித்து ஓரளவுக்கு உங்களுக்கே புரிந்துவிடும். இந்த விஷயத்தில் என்னால் ‘ஆமாம்’ என்றும் சொல்ல முடியாது, ‘இல்லை’ என்றும் உறுதியாக மறுக்க முடியாது.

அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு சந்நியாச வாழ்க்கைக்கு செல்லவில்லை; அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுகிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தால் போதும். அவ்வளவுதானே! ஒருவரை நேசித்து இத்தனை பேர் ஒன்று கூடியிருந்த காட்சி உண்மையிலேயே பிரமிப்பை ஏற்படுத்தியது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, அதிகாலை 1 மணி வரை நீடித்தது. ஷோ மட்டும் சுமார் 9 மணி நேரம் நடந்துள்ளது. மக்கள் வருவதும், திரும்பிச் செல்வதும் சேர்த்து மொத்த நேரம் சுமார் 13 மணி நேரம் ஆகிறது. அந்த 9 மணி நேர நிகழ்ச்சியிலும் மக்கள் வெளிப்படுத்திய உற்சாகமும், வைபும் உடல் முழுவதும் சிலிர்க்க வைத்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading