காதல் பிரேக் அப் குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘யானை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ரத்னம்’, ‘டிமான்டி காலனி 2’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அவர் ‘டிமான்டி காலனி 3’ உட்பட சில புதிய படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர், கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக முன்பே வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் தனது காதலருடன் பிரேக்-அப் செய்து விட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு, அவரது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading