‘சூரன்’, ‘திலகர்’, ‘ஒருநாள் இரவில்’, ‘பர்ஹானா’, ‘ஹரா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அனுமோல். ‘அயலி’, ‘ஹார்ட் பீட்’ போன்ற வெப் தொடர்களிலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது தமிழ் மொழியைத் தாண்டி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துக் கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனுமோலிடம், உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உண்மையாகச் சொன்னால், என் நடிப்பு எனக்கே முழுமையாக திருப்தி தருவதில்லை. ஒவ்வொரு படத்தையும் பார்த்தபின், இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என்று எனக்குள் நான் நினைத்துக்கொள்வேன்.
எப்போதும் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே நான் என்னிடம் சொல்லிக்கொள்ளும் மந்திரம். அதுவே என் வெற்றியின் ரகசியம்” என்று தெரிவித்துள்ளார்.
