யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படத்தில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா !

நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

சமீபத்தில் இப்படத்திலிருந்து கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply