என் பெயரில் மோசடி செய்கிறார்கள் ஏமாற வேண்டாம்… நடிகை கிரித்தி கர்பண்டா ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

தனது பெயரை பயன்படுத்தி இணையத்தில் மோசடி முயற்சி நடைபெறுவதாக நடிகை கிரித்தி கர்பண்டா கவலை தெரிவித்துள்ளார். தமிழில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘புரூஸ் லீ’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கிரித்தி கர்பண்டா.

அவரது பெயரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் போலியான கணக்கை உருவாக்கிய மர்ம நபர், கிரித்தி கர்பண்டாவுக்கு நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு பண மோசடி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக அந்த வாட்ஸ் அப் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை கிரித்தி கர்பண்டா, இது தன்னுடன் எந்த வகையிலும் தொடர்பற்றது என்றும், யாரும் ஏமாற வேண்டாம் என்றும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading