‘கருப்பு’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் தனது 46வது திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாகவும், ‘கஜினி’ படத்தில் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், தற்போது சூர்யாவின் 46வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இந்த திரைப்படம் 45 வயதுடைய ஒரு ஆண் மற்றும் 20 வயதுடைய ஒரு பெண் இடையிலான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பல்வேறு விதமான உறவுகளின் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கதையுடன் இந்த படம் தயாராகி வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
