என் ரசிகர்கள் எனக்காக 33 வருடங்களாக என்னோடு நின்றனர்… அடுத்த 33 வருடங்களுக்கு அவர்களுக்காக நான் அவர்களோடு நிற்க போகிறேன் – தளபதி விஜய் | JanaNayagan Audio Launch

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (27/12/2025) மலேசியாவில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், இதை சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை என் இறுதி படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கிறது என்பது சிறப்பு. இலங்கைக்கு பிறகு மலேசியாவில் தமிழ் மக்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள். 

நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என் ரசிகர்கள் பெரிய கோட்டை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். என் கரியரின் முதல் நாளிலிருந்து பல அவமானங்களைச் சந்தித்தேன். என் ரசிகர்கள் எனக்காக 33 வருடங்களாக பலவற்றைக் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த 33 வருடங்களில் அதனை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப் போறேன். எனக்கு ஒன்றுண்டானால், தியேட்டர் வாசலில் வந்து நின்று பார்க்கிறார்கள். நாளைக்கு அவர்களுக்கு ஒன்றுண்டானால், அவர்களது வீட்டுக்கு சென்று நின்று பார்ப்பேன்! எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.”அதற்காக நான் அவர்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்லை. நன்றிக் கடனை தீர்த்துவிட்டு தான் செல்வேன். 

மலேசியாவின் தமிழ் சினிமா மார்க்கெட் மிக முக்கியமானது. நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படம் இங்கு ஷூட் செய்யப்பட்டது. என் காவலன், குருவி படங்களும் இங்கே ஷூட் செய்யப்பட்டது. நான் அனிருத்துக்கு ‘MDS’ என்று பட்டம் கொடுக்கிறேன். அது Musical Departmental Store. உள்ளே போனீர்கள் என்றால், பல பாடல்களும் பின்னணி இசையும் கிடைக்கும். நடிகை மமிதா பைஜூ ‘கியூட்’ மட்டும் கிடையாது. இந்தப் படத்திலிருந்து அவர் குடும்பங்களுக்குப் பொக்கிஷமாகவும் மாறுவார். எப்போதும் ஹீரோ-ஹீரோயின் இடையே கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். ஆனாலும், கில்லி படத்திலிருந்து எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. பிரகாஷ் ராஜ் சாருக்கு என்றென்றும் நன்றி.

அதேபோல், உங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனால், வலுவான ஒரு எதிரி அவசியம். சும்மா வருகிறவங்களை எதிர்த்துவிட முடியாது. வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாறலாம். விஜய் தனியாக வருவாரா, அணியாக வருவாரா’ என்ற என்னிடம் கேட்கிறார்கள். நாம் எப்போதும் தனியாக இருந்தோம். 33 வருடங்களாக மக்களோடு இருக்கிறேன். அது அணிதான்‌. இப்போது கூட அணியா தனியா என சொல்லமால் இருக்கிறீர்களே என நினைக்க வேண்டாம். சஸ்பென்ஸ் இருந்தால்தான் கிக் இருக்கும். இதை நகைச்சுவையாக பேசவில்லை, மனதில் இருந்து மக்களுக்காகப் பேசுகிறேன். இதைவிட முக்கியம், செய்யும் செயல்தான் முக்கியம். செய்வதை தான் சொல்ல வேண்டும். 2026ல் History Repeat Itself என கூறிய தளபதி விஜய்‌ கடைசியாக ரசிகர்களின் மத்தியில் செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading