மறு தணிக்கைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என்ன காரணம்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம், தமிழ் மொழிக்கு எதிரான மொழித்திணிப்பை கேள்வி கேட்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் சுதா கொங்காராவின் முந்தைய திரைப்படங்கள் அளித்த நம்பிக்கை காரணமாக, இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பிய போது, சென்சார் அதிகாரிகள் பல இடங்களில் வசனங்களையும் அரசியல் கருத்துகளையும் நீக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுதணிக்கைக் குழுவிற்கு இப்படத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading